பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள 3வது முழு ஊரடங்கு குறித்து நிபுணர் கூறிய முக்கிய தகவல்!

Report Print Basu in பிரித்தானியா
442Shares

பிரித்தானியாவில் தற்போது விதிக்கப்பட்டுள்ள 3வது முழு ஊரடங்கு மிகவும் குறைவானது என்று SAGE உறுப்பினரும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் சுகாதார உளவியல் பேராசிரியருமான Susan Michie தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் பரவி வரும் உருமாறிய புதுவகை கொரோனா மற்றும் அதிகரித்து வரும் தொற்றுகளின் எண்ணிக்கை காரணமாக நாட்டில் 3வது முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

புது ஊரடங்கு குறித்து Susan Michie கூறியதாவது, தற்போதைய தரவுகளை பார்க்கும்போது, ​​கிட்டத்தட்ட 90% மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதாக காட்டுகிறது, இருப்பினும் வெளிப்புறங்களில் நாம் அதிகமானவர்களைப் பார்க்கிறோம்.

அதற்கான விளக்கங்களில் ஒன்று என்னவென்றால், உண்மையில் இது மிகவும் குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு தான், ஏனென்றால் வீட்டு தொடர்புகள் மூலம் இன்னும் நிறைய தொற்றுகள் பதிவாகியுள்ளன, மக்கள் ஒருவருக்கொருவர் வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.

மத நிகழ்வுகளின் அடிப்படையில் பெரியளவில் மக்கள் கூடுகின்றனர், நர்சரிகள் திறந்திருக்கின்றன.

முக்கியமாக, சுகாதார தொழிலாளர்கள் குறித்த பரந்த வரையறை உள்ளது, எனவே 30-50% பள்ளி வகுப்புகள் தற்போது நிரம்பியுள்ளன.

எனவே இந்த விஷயங்களுக்குச் செல்லும் மக்களால் பொதுப் போக்குவரத்து மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது என தெரிவித்துள்ளார்.

இது நிச்சயமாக மிகவும் குறைவான ஊரடங்கு, ஏனென்றால் இதை மார்ச் மாத அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கே தெரியும் என Susan Michie கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்