தடுப்பூசி பாதுகாக்காது என எச்சரிக்கும் பிரித்தானிய அலுவலர்! தாக்குப்பிடிக்கும் என கூறும் பைசர்: குழப்பும் அறிவிப்புகள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
281Shares

புதிதாக திடீர்மாற்றம் பெறுள்ள தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸுக்கு எதிராக, தடுப்பூசிகள் வேலை செய்யாமல் போகலாம் என பிரித்தானிய போக்குவரத்துச் செயலர் தெரிவித்துள்ள விடயம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்துச் செயலரான Grant Shapps, புதிதாக திடீர்மாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், பிரித்தானியாவின் தடுப்புசி போடும் திட்டத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதால், பிரித்தானியாவுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்வது மிகவும் அவசரமாக செய்யவேண்டிய ஒரு விடயமாக ஆகியுள்ளது என்றார்.

அது தொடர்பாக பேசும்போது, புதிதாக திடீர்மாற்றம் பெறுள்ள தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யாமல் போகலாம் என்று கூறினார் Shapps.

சில மணி நேரத்திற்கு முன்புதான், பைசர் நிறுவனம், தங்கள் நிறுவன தடுப்பூசி திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸுக்கு எதிராகவும் திறம்பட செயல்படலாம் என தெரிவித்திருந்தது.

அப்படியிருக்கும்போது, Shapps, புதிதாக திடீர்மாற்றம் பெறுள்ள தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யாமல் போகலாம் என்று கூறியுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், தடுப்பூசி நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசி புதிய வகை கொரோனா வைரஸூக்கு எதிராக செயல்படக்கூடியவைதான் என அறிவித்தாலும், இன்னமும் யாரும் அவற்றை மனிதர்கள் மீது சோதனை செய்து மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிட்டு விளைவுகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்