லண்டனில் விதிமீறலில் ஈடுபட்ட 10 வயது குறைவானவரை மணந்த தமிழ்ப்படத்தில் நடித்த நடிகை! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Report Print Raju Raju in பிரித்தானியா
2544Shares

லண்டனில் உள்ள சலூன் கடையில் கொரோனா விதிகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழில் வெளியான தமிழன் என்ற திரைப்படம் மூலம் இந்திய திரையுலகிற்கு அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

பின்னர் இந்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய அவர் முன்னணி நடிகையானார்.

38 வயதான பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பெரியளவில் வயது வித்தியாசம் காரணமாக இது விமர்சனத்தை கிளப்பியது. தற்போது பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், தொற்று பரவாமல் தடுப்பதற்காக பெண்களின் முடி அழகு மையம், டாட்டூ பார்லர்கள், ஸ்பாக்கள், மசாஜ் பார்லர்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அங்குள்ள சலூன் கடைக்கு சிகை அலங்காரத்திற்காக பிரியங்கா சோப்ரா சென்ற போது, அங்கு அவர் கொரோனா விதிகளை மீறியதாக புகார் எழுந்தது.

தகவலறிந்த பொலிசார் சம்பந்தப்பட்ட சலூனுக்கு சென்று பிரியங்கா சோப்ராவை எச்சரித்து வந்தனர். இதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ‘மெயில் ஆன்லைன்’ என்று ஊடகத்திடம் கூறுகையில், ‘பிரியங்கா சோப்ரா கொரோனா விதிகளை மீறியதாக மாலை 5.40 மணிக்கு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு சம்பந்தப்பட்ட சலூனுக்கு சென்று, அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஊரடங்கு சட்டம் தொடர்பான அனைத்து விதிகளையும் பின்பற்றுமாறு பிரியங்கா சோப்ராவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவருக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. பிரியங்கா சோப்ரா, தனது செல்ல நாய் மற்றும் அவரது தாய் மது சோப்ராவுடன் சலூனுக்கு வந்தார் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்