நாடு வானில் பறந்துகொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் செய்யப்பட பிரித்தானிய ஹெலிகாப்டர் விவசாய நிலத்தில் சிக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவின் Royal Air Force-க்கு சொந்தமான 12 டன் எடைகொண்ட சினூக் ரக ஹெலிகாப்டரில், ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள RAF Bensonஐ சேர்ந்த குழுவினர், கடந்த செவ்வாயன்று பயிற்சியை எடுத்துக்கொண்டிருந்தனர்.
55 ஆயுதமேந்திய துருப்புக்களை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த கனரக லிப்ட் ஹெலிகாப்டரில் நடு வானில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது, திடியிரென ஹைட்ராலிக்ஸ் செயலிழந்தது.
இதனால், Kingston Lisle கிராமத்தின் மேலே பறந்துகொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த சமவெளியில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
பின்பு இயந்திர கோளாறை சார் செய்ய குழுவினர் முயற்சிசெய்துகொண்டிருந்த நிலையில், அந்த ஹெலிகாப்டர் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் இரங்கத் தொடங்கியது.
அது ஒரு விவசாய நிலம் என்பதாலும், மழை காரணமாக அங்கு ஈரப்பதம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் 12 தந் எடைகொண்ட சினூக்கின் சக்கரங்கள் முழுவதும் சேற்றுக்குள் மூழ்கி, ஹெலிகாப்டரில் அடிபாகம் தரை தட்டி நின்றுவிட்டது.
இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த இயந்திர பொறியாளர்கள் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறை சீர்செய்துவிட்டனர். ஆனால் சக்கரங்கள் நன்றாக சேற்றில் மாற்றிக்கொண்டதால், அதனை மேல கிளப்ப முடியாமல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது.
ஒரு முத்தரப்பு நிபுணர் குழு விமானத்தை சேற்றில் இருந்து பாதுகாப்பாக பிரித்தெடுக்க கடுமையாக உழைத்து வருகிறது.
மற்றோரு கனரக ஹெலிகாப்டரை கொண்டு மிட்ட முயற்சித்தால் இந்த விமானத்தின் வயிற்றில் இணைக்கப்பட்ட ஆண்டெனாக்களை சேதப்படுத்தும் என்ற அச்சத்தில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
பின்னர், வரும் திங்கட்கிழமைக்குள் அப்பகுதிக்கு பிரம்மாண்ட கிரேன்களை வரவழைத்து சினூக்கை பத்திரமாக மீட்க RAF முடிவு செய்துள்ளது.
அதுவரை விமானத்திற்கு பாதுகாப்பாக நிற்க RAF துருப்புகள் அனுப்பப்பட்டன.