வருங்கால கணவனை தவறுதலாக முன்னாள் காதலனின் செல்லப்பெயரை சொல்லி அழைத்த காதலிக்கு நேர்ந்த கொடூரம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
305Shares

பிரித்தானியாவில் தனது வருங்கால கணவனை அழைக்கும்போது, தவறுதலாக தனது முன்னாள் காதலனின் செல்லப்பெயரை சொல்லி அழைத்துவிட்டார் ஒரு பெண்.

Portsmouthஇலுள்ள வீடு ஒன்றிலிருந்து வந்த அவசர அழைப்பின்பேரில் அங்கு விரைந்த பொலிசார், அங்கு Kayleigh Dunning (32) என்ற பெண் நினைவிழந்து கிடப்பதையும் அவருக்கு அவரது வருங்கால கணவரான Mark Brandford முதலுதவி செய்ய முயல்வதையும் கண்டுள்ளனர்.

ஆனால், உடற்கூறு ஆய்வில் Kayleighயின் தலையில் பலத்த காயம் இருந்ததோடு, அவரது மண்டையோடு நொறுங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இரும்புக் கம்பி ஒன்றல அவர் பலமாக தாக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவரவே, வீட்டை சோதனையிட்ட பொலிசாருக்கு இரும்புக் கம்பி ஒன்றும் ஸ்குரூடிரைவர் ஒன்றும் கிடைத்துள்ளன.

விசாரணையில் Mark வேலை செய்யும் இடத்திலிருந்து அதேபோன்ற ஒரு கம்பி காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.

Kayleigh, இதற்கு முன் Dean என்பவரை காதலித்துள்ளார். அவரை பிரிந்தபிறகுதான் Markஐ காதலிக்கத் துவங்கியுள்ளார்.

சமூக ஊடகத்தில் Mark, Kayleighயை புரபோஸ் செய்வதற்கு திட்டமிட்டிருந்த அதே நாள்தான், அவர் நிர்வாணமாக இறந்து கிடந்திருக்கிறார், கூடவே Markம் இருந்துள்ளார்.

அத்துடன் Kayleighயின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததும் உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சில முறை Kayleigh, Markஐ அழைக்கும்போது தவறுதலாக முன்னாள் காதலரான Dean பெயரை சொல்லி அழைத்ததற்காக இருவருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அப்படியிருக்கும் நிலையில், Kayleighயை புரபோஸ் செய்ய Mark திட்டமிட்டிருந்த அதே நாள் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

விசாரணையில், Markஐ அழைக்கும்போது, தவறுதலாக Kayleigh, நூடுல் என்று அழைத்ததும், அதனால் ஆத்திரமடைந்த Mark, Kayleighயை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவரது மண்டை உடைந்து அவர் பலியாகியிருக்கலாம் என்றும் முடிவாகியுள்ளது. அடி வாங்குவதை தடுக்கும்போதுதான் Kayleighயின் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். ஆகவே, Mark கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. நூடுல் என்பது Kayleighயின் முன்னாள் காதலரான Deanஉடைய செல்லப்பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்