பிரித்தானியாவுக்கு வருகை தரும் எந்த ஒரு பயணியும் இனி கொரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவராக இருந்தாலும் பிரித்தானிய குடிமக்களாக இருந்தாலும், பிற நாடுகளை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதில் அவர்கள் எதிர்மறையான முடிவைப் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
முதற்கட்டமாக இங்கிலாந்தில் அடுத்த வாரத் தொடக்கத்திலிருந்து அமுல்படுத்தப்படவுள்ள இந்த திட்டம், கூடிய விரைவில் ஸ்காட்லாந்திலும் செயல்படுத்தப்படவுள்ளது.
வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து பகுதியிலும் இது போன்ற நடவடிக்கையை செய்லபடுத்துவது குறித்து உரிய அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.
இந்த நடவடிக்கியின்முலம் பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் பரவலை குறைக்கமுடியும் என அரசாங்கம் நம்புகிறது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 52,618 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 1,162 பேர் இறந்துள்ளனர். இதமூலம் பிரித்தானியாவில் மொத்தம் 2,889,419 பாதிப்புகளும், 78,508 இறப்புகளும் அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளன.