பிரித்தானியாவிற்குள் நுழைந்த ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! சிக்கி தவிக்கும் பல குடிமக்கள்

Report Print Basu in பிரித்தானியா
313Shares

தென் ஆப்பரிக்காவிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தென் ஆப்பிரிக்காவுடனான போக்குவரத்து தொடர்புகளை பிரித்தானியா தற்காலிகமாக துண்டித்துவிட்டது.

அதாவது, தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருபவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு பிரித்தானியா விதித்துள்ள தடையால் அங்கு வசித்து வந்த பல ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் என்ன செய்வது எங்கு செல்வது என்று தெரியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட்டுடைய போர்த்துகீசிய நாட்டைச் சேர்ந்த மியா ஹென்றி என்ற பெண், பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்றுள்ளார்.

அவரை பிடித்த மான்செஸ்டர் பொலிசார், மியாவை தடுப்பு காவலில் வைத்து பின்னர் அவரை தென் ஆப்பரிக்காவுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.

டிசம்பர் 31 வரை மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாட்டினர் பிரித்தானியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார் என தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள மியாவிடம் அதிகாரிகள் கூறினராம்.

மற்றொரு சம்பவத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டைச் சேர்ந்த மைக்கேல் டாசன் என்பவர், தென் ஆப்பரிக்காவிலிருந்து விமானத்தில் ஏற முயன்றுள்ளார், அப்போது அவர் பிரித்தானியா நுழைய அனுமதி இல்லை என கூறி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் பிரித்தானியாவிற்கு செல்ல விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள், டிசம்பர் 31ம் திகதிக்குள் பிரித்தானியாவில் வசிக்க வேண்டும்.

ஆனால் இப்போது மியா, டாசன் போன்ற பலர் எப்போது, எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்