லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் முகக்கவசம் இல்லாமல் இருந்ததால், குழந்தைகள் முன் அவர் கைது செய்யப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிரித்தானியாவில் தேசிய அளவில் மூன்றாவது பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் எச்சரித்துள்ளனர்.
பொலிசாரின் எச்சரிக்கை இருந்த போதிலும், மத்திய லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடைபெற்றது, அப்போது முகக்கவசம் இல்லாமல் இருந்த நபர், குழந்தைகள் முன் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், நேற்று உள்ளூர் நேரப்படி பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் சதுக்கத்தில் ஆரப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது விதிமுறைகளை மீறியதாக கூறி, 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த போராட்டத்தில் நபர் ஒருவர் மாஸ்க் இல்லாமல் இருந்துள்ளார். பொலிசார் அவரை வெளியேறும் படி கூறியுள்ளனர்.
அந்த நபரின் கையில், வண்ண சுதந்திர அடையாளத்தை குறிப்பிடும் வகையில் பாதகை வைத்திருந்தார்.
ஆனால், அவர் விதிமுறைகளை மீறியதாக கூறி, குழந்தைகளின் கண்முன்னாள் அவருக்கு கை விலங்கு போடப்பட்டு கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியது. அது அவரின் குடும்பத்தினர் என்று கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் தடுத்து நிறுத்திய போது, அவர்கள் தாங்கள் அன்றாட பயிற்சியை மேற்கொள்வதாக கூறியுள்ளனர். பொலிசார் திரும்பி செல்லும் படி கூறியும் மறுத்துள்ளனர்.
தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு விதிமுறைகளில், மக்கள் வெளியில் வந்து உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு விலக்கு உள்ளது.
அதையே போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். ஆனால் இவர்கள் சந்தேகத்திற்கிடமாக கூடியது மட்டுமின்றி, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சந்திக்கவும் அனுமதி இல்லை போன்ற காரணங்களால் பொலிசாருக்கும், அவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
அதன் போதே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளது. இது போன்று 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துணை உதவி ஆணையர் லாரன்ஸ் டெய்லர் கடந்த புதன் கிழமை, மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம், அப்படி கலந்து கொண்டு கட்டுப்பாடுகளுக்கு கீழ்படியாத எவர் மீதும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தார்.