லண்டனில் கொரோனா பாதிப்பால் ஆசிரியை ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து குடும்பத்தார் நினைவு கூர்ந்துள்ளனர்.
தெற்கு லண்டனை சேர்ந்தவர் Jan Docker (55).
ஆசிரியையாக பணிபுரிந்து வந்த Dockerக்கு கடந்த மாதம் 12ஆம் திகதி கொரோனா அறிகுறி ஏற்பட்ட நிலையில் 19ஆம் திகதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் பின்னர் கிறிஸ்துமஸ் நாளில் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அடுத்த 6 மணி நேரம் கழித்து Docker உயிரிழந்தார். Dockerன் உறவுக்கார பெண் Rachel கூறுகையில், அவளுக்கு எந்தவொரு உடல்நலப்பிரச்சினையும் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை.

அவள் கோடிகளில் ஒருத்தி! மற்றவர்கள் மீது மிகுந்த அக்கறையும், அன்பும் கொண்டவராக இருப்பார்.
தன்னுடைய பணியை மிகவும் நேசித்த Docker பல குழந்தைகளுக்கு சிறப்பாக கல்வியை கற்று கொடுத்திருக்கிறார்.
அவளுக்கு கொரோனா உறுதி செய்த பின்னர் திடீரென மூச்சு விட சிரமப்பட்டார், இதையடுத்தே மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
உயிரிழந்த Dockerக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என கூறியுள்ளார்.