இந்த ஆபத்து உள்ளவர்கள் Pfizer/BioNTech தடுப்பூசியை கண்டிப்பாக போடக்கூடாது! பிரித்தானியா மருந்து கட்டுப்பாட்டாளர்கள் கடும் எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா
3403Shares

anaphylaxis ஆபத்து உள்ளவர்கள் Pfizer/BioNTech தடுப்பூசி எடுக்கக்கூடாது என்று பிரித்தானியா மருந்து கட்டுப்பாட்டாளர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளதால் மக்களிடையே சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, anaphylaxis என குறிப்பிடாமல் குறிப்பிடத்தக்க ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் தடுப்பூசி எடுக்கக்கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டாளர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் தடுப்பூசி, மருந்து அல்லது உணவுக்கு anaphylaxis என்ற தீவிர மற்றும் ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையால் பாதிக்கப்பட்ட வரலாறுடைய எந்தவொரு நபரும் Pfizer/BioNTech தடுப்பூசியைப் பெறக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டைத் தொடர்ந்து anaphylaxis-ல் பாதிப்பு எற்பட்ட எவருக்கும் இரண்டாவது டோஸ் கொடுக்கக்கூடாது என்று மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை அமைப்பின் (எம்.எச்.ஆர்.ஏ) தலைமை நிர்வாகி ஜூன் ரெய்ன் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்