கொரோனா வைரஸ் தொற்று மூலம் இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக பிரித்தானியா இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
காலநிலை ஆவணப்படங்களுக்கான ஸ்ட்ரீமிங் தளத்தின் தலைமை நிர்வாகியுடன் சுற்றுச்சூழல் குறித்த உரையாடலின் போது இளவரசர் இவ்வாறு கூறினார்.
காலநிலை மாற்றத்தை சமாளிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய ஹரி, தொற்றுநோயின் ஆரம்பத்தில் யாரோ என்னிடம் சொன்னார்கள், நம்முடைய மோசமான நடத்தைக்காக இயற்கை தாய் நம்மையை அறைகளுக்கு உள்ளேயே அடைத்துள்ளார் என்று.
உண்மையில் நாம் என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும் என ஹரி கூறினார்.
மனிதர்களாக மட்டுமல்லாமல் இயற்கையினூடாக நாம் அனைவரும் எவ்வளவு ஒன்றோடொன்று இணைந்திருக்கிறோம்.
நாம் இயற்கையிடமிருந்து பலவற்றை எடுத்துக்கொள்கிறோம், அரிதாகவே இயற்கையை பாதுகாக்க எதாவது செய்கிறோம்.
பூமியை காக்க உதவும் ஒரு மழைத்துளியாக தங்களை கற்பனை செய்யுமாறு மக்களை வலியுறுத்திய ஹரி.வானத்திலிருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் வெப்பத்தால் காய்ந்த நிலத்திற்கு உயிர் கொடுக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் ஒரு மழைத்துளியாக இருந்தால் என்ன? நம் ஒவ்வொருவரும் அக்கறை காட்டினால் என்ன? கட்டாயம் நாம் செய்ய வேண்டும், ஏனென்றால் இறுதியாக இயற்கையே நம் வாழ்க்கை ஆதாரமாக இருக்கிறது என்று இளவரசர் ஹரி கூறினார்.
You May Like This Video