பிரித்தானியா எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்? கொரோனா தடுப்பூசி திட்ட ஒப்புதலுக்கு பின் பிரதமர் போரிஸ் முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
739Shares

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் வரலாற்றில் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' என்ற தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. அஸ்ட்ரா ஜெனேகா, நோவாவேக்ஸ், சனோபி ஜிஎஸ்கே, பைசர் பயோன்டெக் ஆகிய நிறுவனங்களின் மருந்துகளும் நல்ல பலனை அளிப்பதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இந்த மருந்துகளை கொள்முதல் செய்வதற்காக பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்நிலையில், பிரித்தானியாவில் பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

பைசர் பயோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு பிரித்தானியா ஆகும். பைசர் பயோன்டெக் மருந்து 95 சதவீத செயல்திறன் கொண்டது என இறுதிக்கட்ட பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டதையடுத்து, பிரித்தானியா அரசு இந்த மருந்தின் 4 கோடி டோஸ்களை வாங்கி உள்ளதாக செய்தி வெளியானது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜோன்சன், பிரித்தானியாவின் வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு நன்றி, வசந்த காலத்தில் பிரித்தானியா இயல்பான நிலைக்கு திரும்ப முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் இனி வசந்த காலத்தில், அதாவது அடுத்த ஆண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை மற்றும் உறுதி இருக்கிறது.

இருப்பினும், மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரையிலும், அடுத்தடுத்து குளிர் மாதங்கள் வருவதால், நாம் இது முடிந்துவிட்டது என்று நம்பிவிடக்கூடாது என்று எச்சரித்தார்.

மேலும், அனைத்தும் வெளியேறிவிட்டது, அதாவது, பிரித்தானியா வரலாற்றில் வெகுஜன தடுப்பூசி போடும் மிகப்பெரிய திட்டமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று, பைசர் தடுப்பூசியைப் பயன்படுத்த பிரித்தானியா ஒப்புதல் அளித்த நிலையில், இது குறித்து அவர் கூறுகையில், தடுப்பூசி செயல்படுவதில் எந்த கேள்வியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்