லண்டன் சிறையில் உள்ள இந்திய கோடீஸ்வரர் நிரவ் மோடி தொடர்பில் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர் நிரவ் மோடி, வைர வியாபாரியான இவர் வைரத்தை கைகளில் வைத்து கொண்டு வெளியிடும் புகைப்படங்கள் மிக பிரபலம்.
இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு லண்டனுக்கு நீரவ் தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை 29ம் திகதி வரை நீட்டிக்க நேற்று லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து அவரது காவலை வருகிற 29ம் திகதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட் நாடு கடத்தக் கோரும் வழக்கின் இறுதி விசாரணை, ஜனவரி 7 மற்றும் 8-ந் திகதிகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.