33 வருடங்களில் இல்லாத வகையில் பிரித்தானிய மகாராணியாரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்திய கொரோனா

Report Print Balamanuvelan in பிரித்தானியா
373Shares

பிரித்தானிய மகாராணியார் 33 வருடங்களில் இல்லாத வகையில், முதன்முறையாக தனிமையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் சூழலை கொரோனா உருவாக்கிவிட்டது.

சாதாரண குடும்பத்தவர்களானாலும் பண்டிகை காலங்களில் உறவினர்களோடு கூடி மகிழ்வதைத்தான் விரும்புவார்கள் என்னும்போது, ராஜ குடும்பத்தில் பண்டிகைகள் எப்படி இருக்கும்? மகாராணியார் கிறிஸ்துமஸ் காலங்களில் Sandringhamஇல் உள்ள வீட்டுக்கு சென்றுவிடுவார். அங்கு, மொத்த குடும்பமும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், இம்முறை அவர் அப்படி செய்யப்போவதில்லையாம். 33 வருடங்களில் முதன்முறையாக கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது Windsor மாளிகையிலேயே இருந்துவிடப்போகிறாராம்.

Windsor மாளிகையில், மகாராணியாரும் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் தனிமையில் கிறிஸ்துமஸ் கொண்டாட இருக்கிறார்களாம்.

எல்லாவற்றிற்கும் காரணம் இந்த கொரோனாதான்... 94 வயதாகும் மகாராணியாரும், 99 வயதாகும் அவரது கணவரும், இப்படி உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் பயணம் செய்வது பாதுகாப்பானதல்ல என கருதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

அத்துடன், இம்முறை வழக்கம்போல கிறிஸ்துமஸ் ஆராதனையிலும் மகாராணியார் கலந்துகொள்ளப்போவதில்லையாம், கூட்டத்தை தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ள அவர், Windsor மாளிகையிலுள்ள சிற்றாலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனையில் பங்கேற்க இருக்கிறார்.

அதேபோல், ஆண்டுதோறும் மகாராணியார் கிறிஸ்துமஸ் காலத்தில் அரண்மனை ஊழியர்களுக்கு தன் கையால் பரிசு வழங்குவதுண்டு, அந்த வழக்கமும் இம்முறை கொரோனா அச்சம் காரணமாக மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்