சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு

Report Print Fathima Fathima in பிரித்தானியா
304Shares

ஸ்காட்லாந்தின் பெண்களின் மாதவிடாய் நாட்களில் இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.எஸ்.பி) மோனிகா லெனான் பெண்களுக்காக சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட சுகாதாரப் பொருள்களை இலவசமாக வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா நேற்று விவாதிக்கப்பட்ட போது, 121 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது, இந்நிலையில் பள்ளிகள் உட்பட பொது இடங்களில் பெண்களுக்கான சுகாதார பொருட்கள் இலவசமாக கிடைக்கும்.

அத்துடன் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாகிறது ஸ்காட்லாந்து.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்