லண்டன் இரயிலில் பெண் அருகில் சென்று உட்கார்ந்த நபர் செய்த மோசமான செயல்! சிசிடிவி புகைப்படத்துடன் முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா
1330Shares

லண்டன் பாதாள இரயிலில் பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட நபர் அவருக்கு கட்டாயப்படுத்தி போதை மருந்து கொடுத்த சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

கிழக்கு லண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி காலை 6 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இரயிலில் ஏறிய ஒரு நபர் இருக்கையில் உட்கார்ந்திருந்த இளம்பெண் அருகில் சென்று திடீரென உட்கார்ந்தார்.

பின்னர் அப்பெண்ணிடம் மோசமாகவும், தவறாகவும் நடந்து கொண்டிருக்கிறார்.

இதையடுத்து தன் பாக்கெட்டில் இருந்து போதை மருந்துகளை எடுத்த அவர் அப்பெண்ணுக்கு அதை கட்டாயப்படுத்தி கொடுத்ததோடு அந்த மருந்துகளை எடுத்து கொண்டு தன்னுடன் வரும் படி வற்புறுத்தினார்.

மேலும் தன்னிடம் கத்தி இருப்பதாகவும் மிரட்டியிருக்கிறார்.

இதை தொடர்ந்து இருவரும் இரயிலில் இருந்து கீழே இறங்கிய நிலையில் அப்பெண் அந்த நபரிடம் இருந்து தப்பி சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் குறித்த சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த நபரிடம் சம்பவம் தொடர்பில் விசாரித்தால் முக்கிய தகவல் கிடைக்கும் என பொலிசார் கருதுகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்