பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று... வனப்பகுதியில் முன்னாள் காதலரின் வெறிச்செயல்: வெளியான முழுத்தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் உறவை முறித்துச் சென்ற முன்னாள் காதலியை திட்டமிட்டு கடத்திச் சென்று கொலையும் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Teesside பகுதியைச் சேர்ந்த Natalie Harker என்பவரையே, வேலைக்கு செல்லும் வழியில் காத்திருந்து, வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்றுள்ளார் Andrew Pearson.

இந்த அதிர்ச்சியில் சுயநினைவற்ற நிலையில் இருந்த நடாலி ஹார்க்கரை பியர்சன் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரங்கள் அனைத்தையும் தொடக்கத்தில் மறுத்த பியர்சன், மூன்று வார கால நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

பியர்சன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 23 ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது.

பியர்சனின் கொடுஞ்செயலை கடுமையாக விமர்சித்த நீதிபதி, சடலம் என்றும் பாராமல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளது கொடுமையான செயல் என்றார்.

பியர்சன் உடனான 18 மாத உறவை நடாலி(30) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முறித்துக் கொண்டுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் 45 வயதான பியர்சன் தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளதாக நடாலி நண்பர்களிடம் புகாரளித்துள்ளார்.

இருப்பினும், நடாலி பொலிசாரின் உதவியை நாடாமல் போனதே அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர், நண்பர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்