ரகசிய உறவை வெளியில் சொல்லாமல் இருக்க 1.2 மில்லியன் பவுண்டுகள் கொடுத்த துபாய் இளவரசி: நீதிமன்றத்தில் வெளியான உண்மை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

துபாய் இளவரசரின் ஆறாவது மனைவியான இளவரசி ஹயா, தன்னுடனான ரகசிய உறவை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக தனது பாதுகாவலருக்கு 1.2 மில்லியன் பவுண்டுகள் கொடுத்த விடயம் வெளியாகியுள்ளது.

துபாய் இளவரசர் Sheikh Mohammed Al Maktoumஇன் ஆறாவது மனைவி, இளவரசி ஹயா (46) . பிரித்தானியரான இளவரசியின் பாதுகாவலர் Russell Flowers (37) என்பவருக்கும் தனது மனைவிக்கும் தவறான உறவு இருப்பது தெரிந்ததையடுத்து, அரசருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், ஹயாவின் பிள்ளைகள் யாரிடம் இருப்பது என்பதை முடிவு செய்வதற்காக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் முடிவில் பிள்ளைகள் ஹயாவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதே நேரத்தில், வழக்கு விசாரணை பல ரகசியங்களை வெளிக்கொணர்ந்துள்ளது. ஹயாவின் தனிப்பட்ட பாதுகாவலரான Russellக்கும் ஹயாவுக்கும், இரண்டு ஆண்டுகளாக முறை தவறிய உறவு இருந்துள்ளது.

அதை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக Russellக்கு ஹயா 1.2 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளார்.

விலையுயர்ந்த பரிசுகளை மழையாக பொழிந்ததில் Russellம் மயங்கிவிட்டதாக, Russellஇன் மனைவியின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹயா பிரித்தானியாவில் தங்கும்போதெல்லாம் Russellம் அவரும் சேர்ந்தே வெளியே போவதும், இரவு எங்கோ தங்கிவிட்டு காலையில் திரும்புவதும், வெளிநாடுகளுக்கு சென்றால், எடுக்கும் அறைகளுக்கு நடுவில் கதவு இருப்பது போன்ற அறைகளை தேர்வு செய்ததும் என பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஹயாவுக்கும் தன் கணவருக்கும் இடையே தவறான உறவு இருப்பதை Russellஇன் மனைவியும் அறிந்துகொண்டுள்ளார்.

Russellம் அவரை விவாகரத்து செய்துள்ளார். ஆக, ஹயாவின் உறவு, Russellஇன் திருமண வாழ்க்கையையும் பலி கொண்டுள்ளது. இப்போதும் ஹயா தன் பிள்ளைகளுடன் லண்டனில்தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கும் Russellக்கும் உள்ள உறவு குறித்தும், 1.2 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்பட்ட விடயம் குறித்தும் கேட்டபோது Russell பதிலளிக்க மறுத்துவிட்டார்!

You May like This Video

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்