இலங்கை உட்பட ஐந்து நாட்டவர்களுக்கு பிரித்தானியா பயணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு: நல்ல செய்திதான்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
907Shares

பிரித்தானியாவின் கொரோனா அபாய நாடுகள் பட்டியலிலிருந்து (Government's travel 'red list') இலங்கை முதலான ஐந்து நாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

அதாவது, இலங்கை, இஸ்ரேல், நமிபியா, ருவாண்டா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி பிரித்தானியாவுக்கு வந்தால், அவர்களுக்கு 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தல் கிடையாது.

இந்த சலுகை, நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4 மணியிலிருந்து அமுலுக்கு வருகிறது. ஆனால், இந்த சலுகை, இங்கிலாந்து வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்துக்கு செல்வதற்கு மட்டுமே, ஸ்காட்லாந்துக்கு கிடையாது.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் கொரோனா அபாயம் குறைந்துவருவதால் இந்த சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தி, இலங்கை முதலான நாட்டிலுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான் என்றாலும், அது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வாழ்பவர்கள் மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

காரணம், இங்கிலாந்தில் வாழ்பவர்கள், இரண்டாவது ஊரடங்கு காலத்தில் இருக்கிறார்கள். சர்வதேச பயணம் செல்ல அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வேல்ஸிலும் வெளிநாட்டு விடுமுறைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க காரணம் இருந்தால் மட்டுமே வேல்ஸ் மக்கள் வெளிநாடு பயணம் செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்