பெற்றோர் கனடாவில்... பிரித்தானியாவில் இருந்த குழந்தை மழைநீர் வடிகால் குழாயில் கண்டெடுக்கப்பட்ட சோகம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
2233Shares

பிரித்தானியாவில் அழகான ஆண் குழந்தை ஒன்று, மழைநீர் வடிகால் குழாய்க்குள் விழுந்துள்ளது.

பிரித்தானியாவிலுள்ள Somerset என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றில், Thomas Branchflower என்ற பதினேழு மாதக் குழந்தை மழைநீர் வடிகால் குழாயில் விழுந்து சுயநினைவின்றிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை, ஐந்து நாட்களுக்குப் பின் இறந்துபோனான்.

இந்த சம்பவம் நடந்துள்ளது பிரித்தானியாவில், ஆனால் குழந்தையின் பெற்றோர் வசிப்பதோ கனடாவில்... Tanya Branchflower எனும் Thomasஇன் தாயும், அவனது தந்தையும் கனடாவிலிருந்து வந்து, குழந்தை இறக்கும்போது மருத்துவமனையில் அவன் அருகே இருந்துள்ளனர்.

அவர்கள் ஏன் பதினேழு மாதக்குழந்தையை பிரித்தானியாவில் இன்னொருவர் வீட்டில் விட்டுவிட்டு கனடா சென்றார்கள் என்பது தெரியவில்லை. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்