பிரித்தானியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 45,627 கத்தி தொடர்பான குற்றச்செயல்கள் நடைபெற்றுள்ளன.
அவற்றில் மூன்றில் ஒரு பங்கு, லண்டனில் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்நிலையில், இம்மாதம் (நவம்பர்) பிரித்தானியாவில் கத்தி தொடர்பான குற்றத்தில் ஈடுபடுவோரை பிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கினர்.
அந்த வகையில், இம்மாதம் 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலான ஒரு வார காலகட்டத்தில் மட்டும், 2,000க்கும் அதிகமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதும், குற்றவாளிகளே ஒப்படைத்ததுமாக மொத்தம் 10,000 கத்திகளை பொலிசார் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.