கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய திருப்பம்! பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செயல்திறன் குறித்து முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா
903Shares

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தடுப்பூசி வயதானவர்களிடையே வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது, மேலும் இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய திருப்பம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

Pfizer மற்றும் BioNTech தங்கள் தடுப்பூசிகள் 95% செயல்திறனைக் காட்டியுள்ளதாகவும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 94% செயல்திறன் கொண்டது என அறிவித்ததை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குறித்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆக்ஸ்போர்டின் ChAdOx1 nCov-2019 தடுப்பூசி 56-69 வயதுடைய ஆரோக்கியமான முதியவர்களிடமும், 70 வயதிற்கு மேற்பட்டவர்களிடமும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடுமையான நோய்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் இறக்க வாய்புள்ள நோயாளிகளிடையே இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, வரவிருக்கும் வாரங்களில் ஆரம்பகட்ட செயல்திறன் அளவீடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

இந்த தடுப்பூசி ஒழுங்குமறை ஒப்புதல் பெற வேண்டியுள்ள நிலையில், பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமான அளவில்100 மில்லியன் அளவிலான தடுப்பூசிக்கு பிரித்தானியா அதிகாரிகள் ஆர்டர் செய்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்