அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் முடிவை பிரித்தானியா பின்பற்றும்! பாதுகாப்பு அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
213Shares

ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ படைகளின் எண்ணிக்கையை குறைக்கும் விடயத்தில் பிரித்தானியா அமெரிக்காவை பின்பற்றும் என நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை ஜனவரி மாதத்தில் 4,500-லிருந்து 2,500 ஆகக் குறைப்பார் என்று பென்டகன் செவ்வாய்க்கிழமை கூறியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை பிரித்தானியா பின்பற்றும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் கூறினார்.

அமெரிக்கா ஏதேனும் ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள அவர்களின் இராணுவப்படையின் எண்ணிக்கையை குறைந்துவிட்டால், நாங்களும் குறைப்போம் என்று கூறினார்.

ஆனால் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பைப் பாதுகாக்க அதன் அரசாங்கத்துடனும் அமெரிக்காவுடனும் தொடர்ந்து செயல்படும் என்று பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்