லண்டனில் மாஸ்கால் பெருந்தொகை பிழை விதிக்கப்பட்ட பேருந்து பயணி: எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா
338Shares

லண்டனில் ஒரே நாளில் தொடர்ந்து இரண்டு முறை பேருந்தில் மாஸ்க் அணியாமல் பயணித்த பயணிக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லண்டனின் ஸ்ட்ராட்போர்ட் பகுதியைச் சேர்ந்த 49 வயதான பேருந்து பயணி Frederick Adomako-Frimpong என்பவருக்கே அபராதமாக 1,710 பவுண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாஸ்க் அணிய மறுத்தமைக்கு போதிய காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது.

ஜூலை 15 ஆம் திகதி, குறித்த பயணி இருவேறு சந்தர்ப்பங்களில் மாஸ்க் அணியாமல் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

இவருடன் பல பயணிகள் பேருந்தில் மாஸ்க் அணியாமல் பயணித்தமைக்காக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டனர்.

வெஸ்ட்மின்ஸ்டரைச் சேர்ந்த 30 வயதான சாரியன் கமாரா பேருந்தில் மாஸ்க் அணியாமல் பயணம் செய்ததாக கூறி 194 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டார்.

கர்ப்பிணி தாயார் ஒருவர் பேருந்து ஏறும் நேரம் மாஸ்க் அணியாத நிலையில், சக பயணி ஒருவர் அவருக்கு புதிய மாஸ்க் ஒன்றை அளித்தார், இருப்பினும், அவரும் அபராதம் செலுத்த வேண்டியவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்