600 ஆண்டுகளுக்குமுன் நீ என் காதலி: இளம்பெண்ணை மனோவசியம் செய்த பேராசிரியர் கூறிய பூர்வஜென்ம கதைகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
2535Shares

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவரை மனோவசியம் செய்த மனோதத்துவ இயல் பேராசிரியர் ஒருவர், அந்த பெண்ணிடம் நீயும் நானும் 600 ஆண்டுகளுக்கு முன் காதலர்கள் என்று கூறியிருக்கிறார்.

பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கும் Dr Waseem Alladin என்பவரது மாணவி ஒருவர் மன அழுத்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு அதற்காக மத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அவளை, இனி மாத்திரைகள் எடுக்கவேண்டாம் என்றும், மனோவசியம் செய்தே குணமாக்கிவிடமுடியும் என்றும் கூறி தனியாக சந்தித்திருக்கிறார் Alladin.

அப்போது அவளை மனோவசியம் செய்து, அவள் தன் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, அவளை தவறாக தொடவும், தவறாக அவளிடம் பேசவும், அவளை புகைப்படம் எடுக்கவும் செய்திருக்கிறார் Alladin.

முன் ஜென்மத்தில் தானும் அவளும் காதலர்கள் என்றும், அவளை அடைவதற்காக தான் 600 ஆண்டுகள் தான் காத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார் Alladin. அந்த பெண் முரண்டு பிடிக்கவே, நீ எனக்கு ஒத்துழைக்காவிட்டால், எனக்காக வேறு ஐந்து மாணவிகள் காத்திருக்கிறார்கள் என்று கூறி மறைமுகமாக மிரட்டியும் இருக்கிறார் அவர்.

இதுபோக, வேறொரு மாணவியிடம், உனக்கு பிரச்சினை இருக்கிறது, அதை சரி செய்யவேண்டுமானால் உன் முழு உடலின் புகைப்படம் வேண்டும் என்று கூறி புகைப்படம் ஒன்றையும் வாங்கியிருக்கிறார் Alladin.

இப்படி மூன்று மாணவிகளை அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், ஒரு மாணவி மட்டும் துணிந்து புகாரளித்துவிட்டிருக்கிறாள்.

அதன்படி Alladin மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தான் பாலியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை என்று Alladin கூற, அவர் பாலியல் நோக்கத்துடன்தான் செயல்பட்டிருக்கிறார் என்று கூறி, உடனடியாக அவரை பணி நீக்கம் செய்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்