பிரித்தானியாவின் Rotherham பகுதியில் மரங்கள் அகன்ற பகுதி ஒன்றில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த ஒருவர், அங்கு தோலுரிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாய்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் பொலிசாருக்கு தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் சோதனை மேற்கொண்டதில் அந்த நாய்கள் இரண்டும் கடுமையாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவை என்ன இன நாய்கள் என்பதைக் கூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு அவை சித்திரவதை செய்யப்பட்டிருந்தன.
இந்த கோர சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் என்பது தெரியவில்லை. எனவே, பொலிசார் இந்த பயங்கர குற்றத்தை செய்த நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
