லண்டனில் காலை நேரத்தில் நடந்த பயங்கர சம்பவம்! 2 பேர் பலி: வெளியான முழு தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் கேஸ் வெடிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், கட்டிட இடுபாடுகளுக்கிடையே இருக்கும் சிலரை தீயணைப்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

பிரித்தானியாவின் மேற்கு லண்டனின் Ealing-ல் இருக்கும் Southall பகுதியில், King வீதியில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 6.20 மணிக்கு பயங்கரமான கேஸ் வெடிப்பு ஏற்பட்டுவிட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

கேஸ் விபத்து நடந்த இடம் ஒரு வணிக வளாகம் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக போன் ஷாப் கடையில் இந்த கேஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக வணிக உரிமையாளர் தாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகவும், அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பெரியவர்களையும் குழந்தைகளையும் இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கு சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆறு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்ததாகவும், ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் ஏணியைப் பயன்படுத்தி கட்டிடத்தின் பின்புறத்திலிருந்து மீட்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

(Picture: PA)

மேலும் இரண்டு குழந்தைகள் மற்றும் 14 பெரியவர்கள் சுற்றியுள்ள பகுதியில் இருந்து எந்த ஒரு பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் சம்பவ இடத்தில் இரண்டு பேர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.

(Picture: PA)

வெடிப்பால் சேதமடைந்த டை உரிமையாளர், என்ன நடந்தது என்று சொல்ல ஒரு பக்கத்து வீட்டுக்காரர் அழைத்தபோது அவர் இது ஒரு முழுமையான குழப்பம். யாராவது காயமடைந்தார்களா அல்லது யார் மாடியில் வசிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

நான் நேற்று இரவு வழக்கம் போல் எனது கடையை பூட்டினேன், எதுவும் தவறு என்று நினைக்கவில்லை. எனது கடை முற்றிலுமாக அழிந்துவிட்டதாக எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது.

(Picture: PA)

மற்றொரு வணிக உரிமையாளர் தனது கடை அதிர்ந்தது என்று கூறுகிறார், மேலும், சிலருக்கு காயங்கள் இருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். இது நம் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

லண்டன் தீயணைப்பு படை சந்தேகத்திற்குரிய வெடிப்பு கடையில், கணிசமான சேதம் மற்றும் கட்டிடம் முழுவதும் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

(Picture: PA)

மேலும், இரண்டு பேர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். இது தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தை உறுதிப்படுத்தவும், ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடுவதற்கும் முறையாக செயல்படுவதால் ஒரு கடினமான மற்றும் நீடித்த சம்பவமாகும்.

மாலையில் நடவடிக்கைகள் முடிவடைந்து காலையில் மறுதொடக்கம் செய்யப்படும். இந்த வெடிப்பு சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்