பிரித்தானியாவில் உணவகங்களில் மர்ம ரசாயனத்தை தெளித்த முகமூடி நபர்: 15 பேருக்கு சிகிச்சை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
355Shares

பிரித்தானியாவிலுள்ள பிரபல உணவகங்களில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் மர்ம ரசாயனம் ஒன்றைத் தெளித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

டட்லீ என்ற இடத்திலுள்ள பிட்சா ஹட், மெக் டொனால்ட்ஸ் மற்றும் டெஸ்கோ ஆகிய உணவகங்களில் ஒரு நபர் மர்ம ரசாயனம் ஒன்றைத் தெளித்துச் சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து அவசர உதவிக்குழுவினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையிலிருந்த 14 பேருக்கு சம்பவ இடத்திலேயே உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் படபடப்பு அதிகமாக இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உடனடியாக அங்கு தடயவியல் நிபுணர்கள் கொண்டு வரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், இதுவரை, தெளிக்கப்பட்ட அந்த மர்மப் பொருள் என்னவென்று கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிசார் அப்பகுதியிலுள்ள CCTV கமெராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்