ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இத்தாலி நோக்கி புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஏதோ எரியும் வாசனை வருவதாக ஒரு பயணி தெரிவித்ததுடன், ஒரு விமான ஊழியரும் சுகவீனமடைந்துள்ளார்.
உடனே விமானம் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு உடனடியாக திருப்பப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், விமானத்திலிருந்த ஆனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
சிறு தொழில்நுட்பக் கோளாறு ஒன்று ஏற்பட்டதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விதிமுறைகளின்படி விமானம் புறப்பட்ட இடத்துக்கே அவசரமாக திருப்பப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்தது.