பிரித்தானியாவை சிறுமைப்படுத்திய ராணியார்: பகீர் குற்றச்சாட்டால் அதிர்ந்த அரண்மனை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
339Shares

பிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கு அமுலுக்கு வந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் முதன் முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணியார் எலிசபெத் நாட்டை சிறுமைப்படுத்தியதாக கூறி பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

94 வயதாகும் ராணியார் இரண்டாம் எலிசபெத் நீண்ட ஏழு மாதங்களுக்கு பிறகு, அரண்மனைக்கு வெளியே கடந்த வியாழக்கிழமை பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அவருடன் இளவரசர் வில்லியம் துணைக்கு சென்றிருந்தார். இருவரும் கொரோனா பரவல் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் குழுவினரை சந்தித்துள்ளனர்.

ஆனால் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இருவருமே மாஸ்க் அணிந்திருக்கவில்லை. இச்சம்பவமே தற்போது பிரித்தானியாவில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இச்சம்பவத்தை குறிப்பிட்டு, அரச குடும்ப வர்ணனையாளரான பெஞ்சமின் பட்டர்வொர்த் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ராணியார் இரண்டாம் எலிசபெத், தமது நடவடிக்கையால் பிரித்தானியாவை சிறுமைப்படுத்தியுள்ளார் என அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மட்டுமின்றி, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மேகன் மெர்க்கலிடம் இருந்து இவ்வாறான ஒரு செயலை கண்டிப்பாக நாம் எதிர்பார்க்க முடியாது எனவும், அவர் புத்திசாலி எனவும் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

94 வயதான ராணியார் தற்போதைய சூழலில், மாஸ்க் அணியாமல், அலட்சியமாக நடந்து கொள்வது உண்மையில் ஏற்றுக்கொள்ளும் செயல் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராணியார் மாஸ்க் அணியாத விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம் அளிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

எலிசபெத் ராணியார் அவரது மருத்துவர்களின் ஆலோசனைப்படியே நடந்துகொள்கிறார் எனவும், பாதுகாப்பு தொடர்பில் குறைபாடு ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற 48 பேர்களும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, ராணியாரும் இளவரசர் வில்லியமும் சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றி இரண்டு மீற்றர் இடைவெளியில் இருந்தனர் எனவும், குறித்த நிகழ்வும் வெட்டவெளியில் நடந்தது எனவும் விளக்கமளித்துள்ளனர்.

இருப்பினும், கொரோனா பரிசோதனைகளில் தமக்கு சந்தேகம் உள்ளது எனவும், அந்த 48 பேர்களில் எவருக்கேனும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், ராணியாரின் நிலை கவலை தரும் வகையில் உருமாறும் எனவும் பெஞ்சமின் பட்டர்வொர்த் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்