ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள்! லண்டன் விமான நிலையம் பின்பற்றல்

Report Print Karthi in பிரித்தானியா

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் பயணிகளுக்கு ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் நடைமுறையை அமல்படுத்தி வருகின்றது.

இந்த முறையிலான பரிசோதனை என்பது தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உமிழ்நீர் சோதனை மூலம் இந்த பரிசோதனை 102 பவுண்டுக்கு மேற்கொள்ளப்படுகின்றது.

கோவிட் -19 சோதனை பிரித்தானியாவின் அரசு நடத்தும் தேசிய சுகாதார சேவையை விட விரைவாக முடிவுகளை வழங்கும் என்று ஹீத்ரோ சோதனை வழங்குநர்கள் - விமான சேவை நிறுவனமான கொலின்சன் மற்றும் தளவாட நிறுவனமான சுவிஸ்போர்ட் தெரிவித்துள்ளது.

இத்தாலி மற்றும் ஹாங்காங்கில் பயணிகள் புறப்படுவதற்கு முன்னர் எதிர்மறையான கோவிட் -19 சோதனைக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று விமான நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், பிரித்தானிய அரசாங்கம் கடந்த வாரம் இத்தாலியை அதன் பயண பாதை பட்டியலில் இருந்து நீக்கியது, அதாவது இத்தாலியிலிருந்து வரும் பயணிகள் பிரித்தானியாவிற்குள் நுழைந்தால் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இத்தாலி, சான் மரினோ மற்றும் வட்டிக்கான் மாநிலத்திலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் இப்போது 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அரசு கூறியுள்ளது.

தற்போது ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. மக்களின் அன்றாட வாழ்கை இங்கு பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்