50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்! தாய்நாடு நோக்கி பயணம்

Report Print Karthi in பிரித்தானியா

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டு இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரித்தானியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கடும் உடல் ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை இரண்டாக பிரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், வறுமையில் இருந்த ஜைனாப் செய்வது அறியாது திகைத்து நின்றிருந்தாள்.

இந்நிலையில் இவர்களது மருத்துவ செலவு உள்பட அனைத்து செலவுகளுக்கும் தேவைப்பட்ட சுமார் பத்து கோடி ரூபாயை பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான முர்தாசா லக்கானி என்பவர் கொடுத்து உதவியுள்ளார்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்பது அரிதானது. இவர்களில் 20இல் ஒரு தொகுப்பினர் மட்டுமே தலைகள் இணைந்த நிலையில் ஒட்டிப்பிறக்கிறார்கள். இவர்கள் மருத்துவ ரீதியில் கிரானியோபாகஸ் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குறிப்பாக, இவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தை பருவத்தைத் தாண்டி உயிர் பிழைப்பதில்லை.

image credit: BBC tamil

இந்நிலையில், சுமார் 50 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற மூன்று வேறுபட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகள் வெற்றிகரமாக இருவர்களாக தனித்தனியாக பிரிக்கப்பட்டனர்.

தற்போது மூன்றரை வயதாகும் இரட்டையர்கள் இருவருக்கும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஏற்றவாறு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இருவருக்குமே கற்றல் குறைபாடு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது குழந்தைகளுடன் ஜைனாப் தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு புறப்பட மருத்துவர்கள் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து ஜைனாப் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாகிஸ்தான் பயணிக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்