விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்து கலாட்டா செய்த நபர்... மனைவி எடுத்த அதிரடி நடவடிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
336Shares

மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் பயணித்த பயணி ஒருவர் மாஸ்க் அணிய மறுத்ததோடு கலாட்டாவும் செய்துள்ளார்.

அத்துடன், மற்றவர்களையும் பார்த்து, உங்களுக்கெல்லாம் உண்மை தெரியாது, உங்களை பொய் சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறார்கள், நீங்கள் மாஸ்க் அணியும் வரை கொரோனாவும் இருக்கும் என்று சத்தமிட்டுள்ளார் அவர்.

எல்லோரும் மாஸ்கை கழற்றுங்கள், எதிர்த்து போராடுங்கள் என அவர் கத்த, அவரது மனைவி அவரை ஏதோ கூறி அமைதிப்படுத்த முயன்றுள்ளார்.

உடனே, நீ வாயை மூடு அறிவில்லாதவளே என அவர் கத்த, கணவர் கன்னத்தில் பளாரென்று ஒன்று விட்டார் அந்த பெண்.

உடனே அவரதுகோபம் மனைவி பக்கம் திரும்ப, அவர் அந்த பெண்ணை திருப்பி அடிக்க, ஏற்கனவே எரிச்சலடைந்திருந்த மற்ற பயணிகள், ஆளாளுக்கு அவரை வெளுத்து வாங்கிவிட்டார்கள்.

அடி வாங்கிக்கொண்டு கொஞ்சம் நேர பேசாமல் இருந்தாலும், மாஸ்க் அணியாதீர்கள், உங்கள் சுதந்திரத்தை இழக்காதீர்கள் என்று கத்திக்கொண்டே இருந்திருக்கிறார் அவர்.

பின்னர், விமானம் தரையிறங்கியதும் பொலிசார் அந்த விடயத்தை பொறுப்பேற்றுக்கொண்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது போன்ற விவரங்கள் தெரியவரவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்