விதவை பெண்ணின் துணிச்சல்! விபத்திற்கு காரணம் சாரதியல்ல அரசுதான் என தைரியமாக பேட்டி: முழு விபரம்

Report Print Karthi in பிரித்தானியா
142Shares

இங்கிலாந்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர், விபத்திற்கு காரணம் எனக்கூறி தவறாக ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 7, 2019 அன்று ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் லொரி ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் 44 வயதான ஜேசன் மெர்சர், மற்றும் 22 வயதான அலெக்ஸாண்ட்ரு முர்கானு ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான வழக்கினை விசாரித்த நீதிமன்றம், ‘முன்னோக்கி செல்லும் பாதையில் ஏற்பட்ட கவனக்குறைவுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று நீதிபதி கூறி லொரி சாரதியை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து 40 வயதான பிரீஜெமிஸ்லா சுபா என்கிற சாரதி 10 மாதங்களாக சிறை வாசத்தினை அனுபவித்து வருகின்றார்.

இந்நிலையில் கணவனை இழந்த கிளாரி மெர்சர், “நம்முடைய மற்றும் பலரின் வாழ்க்கையில் இந்த பாரிய தீங்கு விளைவிக்கும் விளைவுக்கு சரியான நபர் பொறுப்பேற்கிறார் என்று நாங்கள் நம்பவில்லை.” என்று விபத்து நடந்த ஸ்மார்ட் மோட்டார் பாதைகளின் தேசிய மதிப்பாய்வைப் பற்றி அவர் தற்போது பேசியிருப்பது பரபரப்பாகியுள்ளது.

மேலும் இந்த விபத்திற்கான காரணமாக தவறான நபரை சிறையில் அடைத்தல் என்பது ஸ்மார்ட் மோட்டார் பாதைகளால் கொல்லப்பட்ட 40-க்கும் மேற்பட்டவர்களில் யாரையும் காப்பாற்றாது என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, லொரி சாரதி வேக வரம்பிற்குள் நன்றாக ஓட்டுகிறார், குடிபோதையில் அல்லது போதைப்பொருட்களில் ஈடுபட்டிருக்கவில்லை என்று கூறியிருந்தார்.

நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக அரசின் சாலை வசதிகளை மேம்படுத்துவதில் உள்ளன கவனக்குறைவை பெண் ஒருவர் சுட்டிக்காட்டியிருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்