பிரித்தானியாவில் சக அலுவலர்களுடன் ஜூம் அழைப்பில் கூட்டம் ஒன்றிலிருந்த தலைமை செயல் அதிகாரி ஒருவர், வெப் கேமுடனேயே கழிவறைக்கு சென்றதால் வேலையிழந்துள்ளார்.
பல மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டும் நிறுவனம் ஒன்றில் விளம்பரப் பிரிவில் தலைமை செயல் அலுவலர் பொறுப்பிலிருக்கும் Nick Emery, சக அலுவலர்களுடன் ஜூம் அழைப்பில் கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கும்போது, வேடிக்கைக்காக தனது வெப் கேமுடன் கழிவறைக்கு சென்றுள்ளார்.
ஆனால், அவர் கமெராவுக்கு தனது பின் பக்கங்களை காட்டியபடி சிறுநீர் கழித்ததாக, கூட்டத்தில் பங்கேற்ற சிலர் அவர் மீது புகாரளித்துள்ளனர்.
நிறுவன உரிமையாளர்களை அந்த புகார் எட்டியதும், விசாரணை ஒன்றைத் தொடர்ந்து Emery பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆனால், அவர் வேடிக்கைக்காகவே அப்படி செய்ததாகவும், அது இப்படி வினையாகிவிட்டது என்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளார்கள்.