பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடு தளர்வு! அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
1578Shares

பிரித்தானியாவில் உட்புறங்களில் மக்கள் சந்திக்க விதிக்கப்பட்டிருந்த காட்டுப்பாட்டில் சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள லண்டன், யார்க் மற்றும் மான்செஸ்டர் போன்ற இடங்களில் உள்ள பப்கள் மற்றும் உணவகங்கள் போன்ற உட்புறங்களில் மக்களை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு பிரித்தானியா பிரதமர் அலுவலகம் இந்த கட்டுப்பாட்டில் சில விலக்குகளை அறிவித்துள்ளது.

அதவாது, பப்கள் மற்றும் உணவகங்கள் போன்ற உட்புறங்களில் மக்கள் ‘வேலை தொடர்பான விஷயங்களை’ சந்தித்து பேச அனுமதிக்கப்படுவதாக பரிந்துரைத்துள்ளது.

வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த 30 பேர் வரை ‘வேலை தொடர்பான விஷயங்களுக்காக’ உட்புறங்களில் சந்திக்கலாம் என்று அரசாங்க வழிகாட்டுதல் விதித்திருக்கிறது.

ஆனால், அவர்கள் சந்தித்து பேசும் இடத்தில் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றுப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்