பிரித்தானிய மில்லியனரிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி! பாதி சொத்தை இழக்க தயாராகும் கணவர்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
607Shares

பிரித்தானியாவின் மில்லியனர்களில் ஒருவரான கார்ல் க்ராம்ப்டனை அவரது மனைவி விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரத்தானியாவில் 'ரோல்ஓவர் ரோமியோ' என அழைக்கப்பட்ட கார்ல் க்ராம்ப்டன் 1996-ல் தனது 23 வது வயதில் 11 மில்லியன் டாலர் லாட்டரியை வென்று திடீர் மில்லியனர் ஆனார்.

பின்னர் தனது குழந்தை பருவ காதலி நிக்கோல் ரோச்சை திருமணம் செய்துகொண்டார். மகன்களான ஈதன்(16), மற்றும் ஜென்சன் (12), ஆகிய குழந்தைகளுக்கு தம்பதிகளான இவர்கள் தற்போது விவாகரத்து பெறப்போவதாக தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிளாக்பூலில் இவர்கள் ஒன்றாக பள்ளியில் படித்திருந்தனர். பின்னர் க்ராம்ப்டன் லாட்டரியை வென்ற ஓராண்டுக்கு பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் இவர்கள் 1999-ல் 500,000 பவுண்டு மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கி குடியேறினர். க்ராம்ப்டன் 3.5 மில்லியன் டொலர்களில் போர்ஷஸ் மற்றும் ஃபெராரிஸ் கார்களை வாங்குவதிலும் விடுமுறைகளை ஆடம்பரமாக கழிப்பதிலும் செலவிட்டனர்.

ஆனால் அவர் செவிலியர் ரோச்சுடன் குடியேறிய பின்னர் தனது பணத்தினை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தார்.

இவ்வளவும் இருந்த பின்னர் தற்போது நிக்கோல் ரோச், கார்ல் க்ராம்ப்டன் உடனான திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

ஒருவேளை விவாகரத்து செல்லுபடியானால் நிக்கோல் ரோச், கார்ல் க்ராம்ப்டனிடமிருந்து 11 மில்லியன் தொகையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்