பிரித்தானியாவில் தந்தையாக நினைத்த நபரின் மோசமான குணம்! குளியலறையில் தாய்-மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரித்தானியா
3710Shares

பிரித்தானியாவில் குளிக்கச்சென்ற இளம்பெண் ஒருவர், குளியலறையில் கண்ணாடிக்குப் பின் ஒரு மொபைல் ஒன்று மறைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கவனித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த Lauren Brightwood (19) என்ற அந்த இளம்பெண், உடனே, தன் தாய்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

உடனே குளியலறைக்கு வாருங்கள், Craigஇடம் எதுவும் சொல்லவேண்டாம் என்ற அந்த செய்தியைக் கண்ட Laurenஇன் தாய் அமைதியாக குளியலறைக்குள் வந்துள்ளார். தாயிடம் Lauren விவரத்தைக் கூற, இருவருமாக அந்த மொபைலை எடுத்து சோதித்துள்ளார்கள்.

அந்த மொபைல், Thomas Craig Lewis (35) உடையது. அதில் Lauren குளிக்கும் காட்சிகள் இருப்பதைக் கண்டு தாயும் மகளும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். Thomas Craig Lewis, Laurenஉடைய தாயின் கணவர்.

Image: Lauren Brightwood

அதாவது Lauren அவருடைய வளர்ப்பு மகள். Laurenஐ அவர் நான்கு வயதிலிருந்தே வளர்த்து வந்துள்ளார்.

தாயும் மகளும் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் Thomasஐ கைது செய்துள்ளார்கள். விசாரணையில், Thomas, 13 வயதிலிருந்தே Laurenஐ அவர் குளிக்கும்போது ரகசியமாக வீடியோ எடுத்துவந்துள்ளது தெரியவந்தது.

தந்தையாக தான் எண்ணிய ஒருவர் தன்னை ரகசியமாக தவறாக ரசித்துவந்த விடயம் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்துள்ளார் Lauren. அக்டோபர் மாதம் 16ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

Image: Lauren Brightwood

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்