இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரத்தானியா பிரதமர் போரிஸ்! அறிவிக்கப்படும் சிறப்பு தகவல் இது தான்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், இன்று அவசரக்கால கோப்ரா கூட்டத்திற்கு பின்னர் பிரதமர் போரிஸ் ஜோன்சன், கருவூலத்தலைவர் ரிஷி சுனக் மற்றும் இங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி ஆகியோருடன் பொது மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்திட்டம் காரணமாக பொருளாதார பாதிப்புகளை மக்கள் பெரிதளவு எதிர்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நிவாரணம் குறித்த அறிவிப்புகளை பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புகள் (நிலை 3), குறைந்த பாதிப்புகள் (நிலை 2), லேசான பதிப்புகள் (நிலை 1) என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

(Picture: PA)

இதில் மூன்றாம் நிலையில் உள்ள பகுதிகளில் மக்கள் ஒன்று கூடும் எவ்வித நிகழ்வுகளும் அனுமதிக்கப்படமாட்டாது. மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் போன்றவை முற்றிலுமாக மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு, அவர்களின் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கினை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையானது கிட்டதட்ட 2,100 பவுண்டுகள் வரை இருக்கும்.

(Picture: Metro.co.uk)

இந்த பகுதிகளில் அத்தியாவசிய பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரு குடும்பத்தினர் மற்றொரு குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் தங்குவதற்கும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நிலை மூன்றில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஒரு மாதத்திற்கு பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிவாரண தொகை குறித்து முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்படவில்லை என விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Picture: PA)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்