மகளின் திருமண வரவேற்பின்போது சுருண்டு விழுந்த தந்தை: திருமண உடையுடன் மகள் செய்த செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
694Shares

தனது மகளின் திருமண வரவேற்பின்போது சுருண்டு விழுந்து பேச்சு மூச்சில்லாத நிலைக்கு சென்ற தந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் அந்த மகள்.

இங்கிலாந்திலுள்ள செஸ்டர் என்ற இடத்தைச் சேர்ந்த Kim Leary (37)க்கும் Iain (37)க்கும் திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது விருந்தினர்களுடன் நடனமாடிக்கொண்டிருந்த Kimஇன் தந்தை John Douglas(65) திடீரென நிலைகுலைந்து சரிந்துள்ளார்.

உடனே, பேச்சு மூச்சின்றி கிடந்த தந்தைக்கு உயிர்காக்கும் அவசர சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார் அவரது மகள் Kim.

அத்துடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, மணமகனும் மணமகளும் அன்று இரவை மருத்துவமனையிலேயே செலவிட்டுள்ளார்கள், அதுவும் தங்கள் திருமண உடையுடனேயே. Johnக்கு நீண்ட நாட்களாகவே இதய பிரச்சினை இருந்திருக்கிறது.

thesun

அதனுடனேயே மகளுக்கு திருமணம் என்பதால் குஷியான அவர், நிறையவே மதுபானம் குடித்துவிட்டு நடனமும் ஆடியிருக்கிறார்.

இதய பிரச்சினை, மதுபானம், நடனம் எல்லாம் சேர்ந்து அவரது இரத்தக் கொதிப்பு எக்கச்சக்கமாக அதிகரிக்க, நிலைகுலைந்துள்ளார் John.

thesun

மருத்துவர்கள் முதலில் அவருக்கு பயங்கர இதய பிரச்சினை ஒன்று இருப்பதாக கருதிய நிலையில், பரிசோதனையின்போது அது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டாலே குணமடையக்கூடிய பிரச்சினைதான் என்பதைக் கண்டறிந்ததால் நிம்மதிப்பெருமூச்சு விடுவது அவர் மட்டுமல்ல, மணமகள் Kimமும்தான்.

தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மரணத்தின் விளிம்புவரை சென்ற தந்தையை மீட்ட Kim ஒரு செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.

thesun

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்