பிரித்தானியாவில் வயதான தாயாரின் தலையை வெட்டிய மகன்: பின்னர் அவர் செய்த செயலால் அதிர்ந்த தந்தை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
455Shares

பிரித்தானியாவில் வயதான தாயாரை கொன்று அவரின் தலையை வெட்டி பிரீசரில் பாதுகாத்த நபருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் வோக்கிங், சர்ரே பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிலிப் தார்வர் என்ற 47 வயது நபர் போதை மருந்துடன் மதுவும் அருந்தியிருந்த நிலையில், தமது 86 வயதான தாயார் ஏஞ்சலா தார்வார் என்பவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த 83 வயதான தந்தை காலின் தார்வர், பயத்தில் அலறியபடி வெளியே சென்று பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பிலிப் தார்வரின் செயலைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

தலை வெட்டப்பட்ட நிலையில் சமயலறையில் இருந்து ஏஞ்சலாவின் உடலை கைப்பற்றிய பொலிசார், அங்கிருந்த பிரீசரில் இருந்து அவரது தலை மற்றும் விரல்களை மீட்டுள்ளனர்.

இதனிடையே பொலிசாரின் குரலுக்கு பதிலளித்த தார்வர், தேசிய கொடியுடன் தாம் சரணடைவதாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.

2019 டிசம்பர் மாதம் நடந்த இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணை முன்னெடுத்த நீதிமன்றம், தாயாரை கொடூரமாக கொலை செய்ததாகவும் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

தார்வர் தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை பெற்றோருடனே வாழ்ந்து வந்ததுடன், பொருளாதார உதவியும் அவர்களிடம் இருந்து பெற்றுள்ளார்.

சம்பவத்தன்று காலை, மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு என்பது போன்று தமது பெற்றோருடன் வழக்கத்துக்கு மாறாக பேசியுள்ள தார்வர், அதன் பின்னர் மது அருந்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தமது தந்தையே தாயாரை கொன்றுவிட்டு, தன் மீது பழி போடுவதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்