வேலையிலிருந்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் அலுவலர்: கர்ப்பிணி மனைவியால் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது வேலையிலிருந்து அனுப்பப்பட்டவர்களில் தர்மீந்திரா கல்யாணும் ஒருவர்.

திடீரென வேலை போனதால் கடுமையான மன அழுத்தத்திலிருந்துள்ளார் கல்யாண். அப்படியிருக்கும் நிலையில், நான்கு மாதங்களுக்குப் பின் தனது வேலைக்கு மீண்டும் விண்ணப்பிக்குமாறும், ஆனால் சம்பளம் முன்பை விட குறைவுதான் என்றும் அவரது அலுவலகம் கூற, மேலும் மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது அவருக்கு.

ஆல்கஹால் வாங்கிக்கொண்டு வந்து நன்றாக குடித்துவிட்டு படுத்தவர் மறுநாள் எழுந்திருக்கவேயில்லை.

ஆல்கஹால் நச்சு மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் கல்யாண்.

அடுத்த நாள் காலை அவரது மனைவியான எல்லா கல்யாண், சோபாவில் படுத்திருந்த கணவர் கீழே கிடப்பதைக்கண்டு, அவரை புரட்டிப்பார்க்க, கணவர் உயிரிழந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

எல்லாவுக்கும் கல்யாணுக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகும் நிலையில், எல்லா கர்ப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கல்யாணின் மரணம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்