பிரித்தானிய பெண் ஒருவர் மதுபான விடுதி ஒன்றில் தனக்கு அறிமுகமான நபரின் வீட்டுக்கு சென்றுள்ளார், ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பது அப்போது அந்த பெண்ணுக்கு தெரிந்திருக்கவில்லை!
ஓரினச் சேர்க்கையாளரான ஜூலியா ராவ்சன் (42) மதுபான விடுதி ஒன்றில் மேனார்ட் எல்லிஸ் (25) என்பவரை சந்தித்துள்ளார்.
நள்ளிரவு தாண்டி 2 மணியானபோது, இருவரும் டாக்சி ஒன்றைப் பிடித்து மேனார்டின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.
அப்போது ஜூலியாவுக்கு மேனார்டும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதோ, அவரது வீட்டில் லீஸ்லி என்ற அவரது காதலன் இருப்பதோ தெரியாது.
போதையிலிருக்கும்போது மட்டும் ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் ஜூலியா, மேனார்ட் வீட்டுக்கு வர, அவரை ஆண்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள்.
பின்னர் ஜூலியாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, கேசுவலாக நடந்து சென்று கால்வாய் ஒன்றின் ஓரமாக வளர்ந்திருக்கும் புதர்களுக்குள் வீசிவிட்டு திரும்பியிருக்கிறார்கள் இருவரும்.
கொலைக்கான காரணம்?
மேனார்ட், சீரியல் கில்லர்கள், பெண்களை பயங்கரமாக வன்புணர்ந்து கொல்வது, தலையை வெட்டுவது, பிணங்களுடன் உறவு கொள்வது போன்ற விடயங்களில் ஆர்வம் கொண்டவர்.
அது தொடர்பான பல புத்தகங்கள், செய்தித்தாள்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகள், DVDக்கள், மற்றும் பயங்கரமான படங்களில் காட்டப்படும் மாஸ்குகள் ஆகியவை மேனார்ட் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் அவரது வீட்டில் ஜாடிகளில் பாம்புகள், முதலைகள் முதலான விலங்குகள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
மேனார்டும் லீஸ்லியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள், விசாரணை தொடர்கிறது.