லண்டனில் 3 வயது மகனுடன் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் தம்பதி குறித்து அருகில் வசிப்பவர்கள் சொன்ன தகவல்கள்!

Report Print Santhan in பிரித்தானியா
3767Shares

பிரித்தானியாவின் தலைநகரில் தமிழ் தம்பதியினர் 3 வயது மகனுடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கிருப்பவர்கள் அவர்கள் குறித்து சில தகவல்களை கூறியுள்ளனர்.

தலைநகரான லண்டனின் Brentford பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு ஒன்றில் மலேசியத் தமிழர்களான

Kuha Raj Sithamparanathan (42), அவரது மனைவி Poorna Kaameshwari Sivaraj (36) மற்றும் அவர்களது மகன் Kailash Kuha Raj (3) ஆகியோர் மேற்கு லண்டனில் வசித்துவந்தனர்.

(Picture: Met Police)

இந்நிலையில், Poorna Kaameshwari Sivaraj-யின் செல்போன் கடந்த 21-ஆம் திகதிக்கு பின் காலவரையுற்று இருந்ததால், உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொலிசார், நேற்று நள்ளிரவு அவர்கள் வசித்த வீட்டின் உள்ளே வலுக்கட்டாயமாக நுழைந்த போது, பொலிசாரைக் கண்டவுடன் கத்தியுடன் இருந்த Kuha Raj Sithamparanathan தன்னைத் தானே குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது, மனைவியான Poorna Kaameshwari Sivaraj மற்றும் Kailash Kuha Raj ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர்.

இதையடுத்து கொலை மற்றும் தற்கொலை குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், இவர்களின் பிரேதபரிசோதனை நாளை, நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி மகன் மற்றும் மனைவியை கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம்? இவர்கள் இருவருக்குள் அப்படி என்ன பிரச்சனை இருந்தது என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.

இருப்பினும் பிரபல ஆங்கில ஊடகம் அருகில் வசிப்பவர்கள் இந்த தம்பதி குறித்து கூறிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், இந்த தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு மலேசியாவின் கொலாலம்பூரில் வெகு விமர்சியாக திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும், ஒரு நண்பர்கள் போன்றும் இருந்து வந்துள்ளனர்.

அருகில் வசிக்கும் Jamila என்பவர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து கேட்கும் போது மிகவும் சோகம் அடந்தேன்.ஏனெனில், அவர்கள் வீட்டில் இருந்த நாயை இறந்துவிட்டதாக கேள்விபட்டேன்.

ஆனால், அந்த நாயை அவர்கள் அந்தளவிற்கு நேசித்தார். எப்போது நடைபயணத்தின் போது, அதாவது வாக்கிங் செல்லும் போது, உடன் அந்த நாய் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

அவர்கள் ஒரு அழகான குடும்பமாக இருந்தனர். ஆனால் இப்போது நடந்ததை கேட்கும் போது எதுவுமே அர்த்தமில்லை என்பது போல் தெரிகிறது.

பிளாட் முழுவதும் ரத்தம் இருப்பதாகவும், நாயும் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் என்னிடம் சொன்னதாக கூறியுள்ளார்.

மேலும் குடியிருப்பின் ஐந்தாவது தளத்தில் வசிக்கும் நபர் ஒருவர், இந்த ஊரடங்கின் போது, தம்பதிகளுக்கு இடையே நிறைய வாக்குவாதம் நடந்ததை தான் கேட்டதாக கூறியுள்ளார்.

கணவரான Kuha Raj Sithamparanathan அடிக்கடி சத்தமிடுவதை கேட்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

அந்த கட்டத்தில் ஏழு ஆண்டுகளாக வசித்து வரும், ஷெரி தீபா என்பவர், அந்த குடும்பத்தினரை நாயுடன் இல்லாமல் இருப்பதை பார்க்க முடியாது.

அந்தளவிற்கு நாய் மீது பாசம் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களை பல மாதங்களாக நான் பார்க்கவில்லை. லிப்ட்டில் அவர்களை எப்போதும் பார்த்திருக்கிறேன்.

அப்போது மிகவும் கனிவுடன், அன்பாகவுமே பேசுவார்கள். அந்த தம்பதி எப்போதுமே ஒன்றாக நடந்து செல்வதை பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் நட்பான, நல்ல மனிதர்களாக இருந்ததாக கூறியுள்ளார்.

இதனால் பொலிசாரின் முழுவிசாரணைக்கு பின்னரே இந்த சம்பவம் குறித்த முழு உண்மை தெரியவரும். அதுமட்டுமின்றி இரண்டு வாரங்களுக்கு முன்பே மனைவி மற்றும் மகன் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், பிரதேபரிசோதனையின் முடிவை பொறுத்து, இந்த வழக்கின் விசாரணை எந்தளவிற்கு இருக்கும் என்பது தெரிய வரும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்