கொரோனாவுக்கு நம்பகமான அறிகுறிகள் இவைதான்: பிரித்தானிய நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
2094Shares

கொரோனா பாதிப்புக்கு சுவை மற்றும் வாசனை அறியும் தன்மையை இழப்பதுதான் நம்பகமான அறிகுறி என்று பிரித்தானிய விஞ்ஞானிகள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திவரும் கொரோனா பாதிப்புக்கு இன்னும் தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாததால் அதன் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரசுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வறட்சி ஆகியவை அறிகுறிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொரோனா வைரசின் அறிகுறிகளாக வாசனை மற்றும் சுவை இழப்பதும் முக்கியமானதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் தலைவலி, மயக்கம், சோர்வு, உடல்வலி ஆகியவையும் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு ஆகியவை அறிகுறிகளாக இருந்தாலும் சுவை மற்றும் வாசனை அறியும் தன்மையை இழப்பதுதான் நம்பகமான அறிகுறி என்று பிரித்தானிய விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து லண்டனில் வெளியாகும் பிளாஸ் மெடிசன் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில்,

திடீரென வாசனை மற்றும் சுவை அறியும் தன்மையை இழந்ததாக கூறியவர்களில் 78 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் 40 சதவீதம் பேருக்கு காய்ச்சலோ, இருமலோ இல்லை.

வாசனை, ருசி திடீரென தெரியாவிட்டால் உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பல நாடுகள் காய்ச்சல் மற்றும் இருமலையே கொரோனாவுக்கான முக்கிய அறிகுறிகளாக கருதுகின்றன.

ஆனால் வாசனை, சுவை அறியும் தன்மையை இழப்பதையே பிரதான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அந்த கட்டுரையில் விஞ்ஞானிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்