வாக்கிங் செல்வதற்கு இதையெல்லாமா கொண்டு செல்வார்கள்: மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்த நபர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வாக்கிங் சென்ற ஒருவர், உடன் கொண்டு சென்ற செல்லப்பிராணியைக் கண்ட பலரும் மிரண்டனர்.

ஆம், அந்த இளைஞர் தன்னுடன் ஒரு 12 அடி நீள மலைப்பாம்பைக் கொண்டு சென்றார். அதைக் கண்டு ஆங்காங்கு ஷாப்பின் சென்று கொண்டிருந்தவர்கள் பயமடைந்தனர்.

உடனே பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட, பொலிசார் வந்து தன் பாம்பை எடுத்துச் செல்லுமாறு அந்த இளைஞரிடம் கோரினர்.

ஆனால், மறுத்த அந்த இளைஞர், தன் பாம்பு தான் எந்த இடத்தில் விட்டேனே அங்கேயேதான் இருக்கும் என்று வாதிட்டார்.

ஆனாலும் தொடர்ந்து பொலிசார் வற்புறுத்தியதின் பேரில், அவர் அந்த பாம்பைத் தூக்கி தன் கழுத்தை சுற்றிப் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

பின்னர் விசாரித்ததில், அந்த இளைஞர் தனது பாம்பை பல்வேறு பிஸியான இடங்களுக்கு கொண்டு சென்று தன் நண்பனுடன் சேர்ந்து தங்கள் வீடியோ சேனலுக்காக படம் எடுப்பதுண்டு என்பது தெரியவந்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்