வெளிநாட்டில் இருந்து பிரித்தானியா திரும்பிய பெண்களுக்கு 1000 பவுண்ட் அபாரதம் விதித்த பொலிசார்! எச்சரிக்கை செய்தி

Report Print Santhan in பிரித்தானியா
546Shares

பிரித்தானியாவை சேர்ந்த பெண்கள், விடுமுறைக்காக ஸ்பெயினுக்கு சென்று திரும்பிய பின், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதால், 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் பிரித்தானியாவில் கடுமையாக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகள மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதையும் மீறி சிலர் நடந்து கொள்வதால், அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், Greater Manchester-ன் Ashton-under-Lyne-ஐ சேர்ந்த இரண்டு பெண்கள், ஸ்பெயினில் இருந்து சமீபத்தில் பிரித்தானியா திரும்பியுள்ளனர்.

(Image: Julian Hamilton/Daily Mirror)

ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவிற்கு திரும்பும் எவரும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதை மீறினால் அபாரதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பெண்கள், விடுமுறைக்கு சென்று திரும்பிய பின், தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மருத்துவனை சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். மற்றொரு பெண் வழக்கமாக தன்னுடைய வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, அவர்களுக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாட்டில் இருந்து திரும்புவது குறித்து, தன் வீட்டு முதலாளியிடம் பொய் கூறியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

(Image: Manchester Evening News)

GMP Tameside North மற்றும் East அதிகாரி PS Jackson, வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்தி கொள்ள தயாராக இல்லை என்றால், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், Greater Manchester-ல் கடந்த 29-ஆம் திகதி அன்று, 330 கொரோனா வழக்குகள் புதிதாக பதிவாகியுள்ளன. இது இங்கிலாந்தில் எங்கும் இல்லாத அளவிற்கு கொரோனா வழக்குகளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்,

அதுமட்டுமின்றி, Greater Manchester-ல் உள்ள அனைத்து பெருநகரங்களும் தொற்று விகிதங்களுக்கான சிவப்பு எச்சரிக்கை மண்டலத்தில் உள்ளன.

இதன் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.’

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்