பிரித்தானியாவில் இன்னும் 3 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி! வெளியான முக்கிய தகவல்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
192Shares

பிரத்தானியாவில் கொரோனா தொற்று தடுப்பூசி 2021-க்குள் பொது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.50 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான தேவையும் மிகவும் அவசியமாகியுள்ளது.

இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியினை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) மறு ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.

ஆய்வு வெற்றிகரமாக முடிவடையும் நிலையில் 2021-க்குள் தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு வரும் என டைம்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் விற்பனை சந்தையில் அடுத்தடுத்து தொடர் போட்டிகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பின்னர் குழந்தைகளைத் தவிர்த்து பெரியவர்கள் அனைவருக்கும் இது 6 மாதக் காலத்திற்குள் முழுமையாக கொண்டு சேர்க்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசியை பரவலாக கொண்டு சேர்க்க ஆயுதப்படை வீரர்களின் உதவியையும் பிரித்தானியா நாட உள்ளதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்