லண்டனில் வீடு இல்லாத குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி தரும் திட்டம்! வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் வீடில்லாத குடும்பத்தினருக்காக நூற்றுக்கணக்கான தற்காலிக வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவலை லண்டன் Councils வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் லண்டனில் வீடற்ற நபர்களின் நெருக்கடியைத் தணித்து அவர்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

நீண்ட காலத்திற்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டப்பட உள்ளன, அதாவது பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களில் வீடுகள் கட்டப்படும்.

அதன்படி Tower Hamletsல் உள்ள சோதனை தளத்தில் முதல் தொகுதி வீடுகள் தயாராகும் என தெரிகிறது.

இந்த திட்டம் £11 மில்லியன் பணத்துடன் லண்டன் மேயரின் நிதியின் கீழ் செயல்படுத்தப்படும்.

இது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், இந்த திட்டம் மேலும் விரிவாக செயல்படுத்தப்படும் என லண்டன் Councilsன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இது குறித்து Tower Hamlets மேயர் John Biggs கூறுகையில், எங்கள் நகரம் தொடர்ச்சியான வீட்டு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் வீடற்ற லண்டன் மக்களுக்கு நாங்கள் வாழ இடம் அமைத்துக்கொடுக்கிறோம் என்பதால் நிச்சயம் இந்த வீடு திட்டம் உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்