பிரித்தானியாவிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்: தாயும் மகளும் இறந்து கிடந்த மர்மம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
473Shares

பிரித்தானியாவின் லங்காஷையரிலுள்ள தீயால் சேதமடைந்த வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.

அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கு இரண்டு பெண்களின் உயிரற்ற உடல்கள் கிடப்பதை பொலிசார் கண்டுள்ளனர்.

அந்த வீட்டில், Dr சமன் மீர் சச்சார்வி (49) மற்றும் அவரது மகள் வியன் மாங்ரியோ (14) ஆகிய இருவரும் வாழ்ந்துவந்துள்ளனர்.

உயிரிழந்தது அவர்கள் இருவரும்தான் என கருதப்படுகிறது, ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

கண்டெடுக்கப்பட்ட உடல்கள் இரண்டும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பொலிசார் இந்த மரணங்களை சந்தேகத்திற்குரிய மரணங்களாக கருதி கொலை வழக்கு ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

FAMILY HANDOUT

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்